மகரந்தம் காற்றில் கலக்கின்ற வேளை
புயல் கற்றில் உளல்கின்ற பேளை
இன்பக் கனவுகள் மனதில் மல்ர்கின்ற வேளை
மங்கை இவள் உறவுச்சிரையில் உழல்கின்ற பேதை
காதலன் நினைவுகள் மனதை நிறைக்கின்ற வேளை
உறவுகளை பிரிய மனம் தவிக்கின்ற நிலை
அம்மாவை மறக்க மனம் வரவில்லை-இருந்தும்
அப்பாவை வெறுக்க மனம் இடந்தரவில்லை
சுற்றும் முற்றும் வழி இல்லையென்றில்லை
சகோதர பாசம் படி தாண்ட விடவில்லை
காதலன் அளைக்கும் கரங்கள் ஓய்ந்த பாடில்லை
கன்னி இவள் ஒரு நிலையை எட்ட முடியவில்லை.
www.tamilarasan.com
காத்திருந்தான் வீதியின் ஓரம்தனில்
கன்னியவள் விளியின் ஓரப்பார்வைதனை
சற்றே நிமிடங்களில் கண்டுகொண்டான் காதலியை
முற்றே திறந்தவன் போல் மூடி முழித்தான்
விளியை- நங்கை
கணப்பொழுதில் கடந்து சென்றாள் இவன் காலடியை
ரணப்பொழுதில் நெஞ்சம் படபடத்துப்போனான்
கடந்தவள் பின்னே பார்வைக்கணைகளை வீசி நின்றான்
பேதையவள் பின்னே திரும்பிப்பார்த்தாள் ஒருகணம்
அளவற்ற ஆனந்தம் அந்தரத்தில் பறந்தது மனம்
சிந்தனையில் மனக்கோட்டை செப்பனிட்டு முடிந்தது
காளையவன் காதல் கனியாகுமா?
Tamilgood.Com
எரிமலையின்
உச்சியிலும் ஏற்றிடும்
எந்தச்சிகரத்திலும் கொண்டு சேர்த்திடும்
பாராமுகம் காட்டியபோதிலும்-அந்தப்
பார்வைகள் உனைச் சுட்டெறிந்திடும்
முன்னெவரும் கண்டிராதது போலவே
முதல் உன்னை சிந்திக்க வைத்திடும்
நித்திரையின் போதும் உன் நினைவுகளை
நிலைகுலைத்து உன் மனதில் அலை மோதும்
சத்தமில்லாத ஒரு தனி உலகில்-உன்னை
சந்திக்க விரும்பும் ஒரு சுதந்திரப்பறவை போலும்
எண்ணங்கள் திரைபுரண்டு ஓடும் மனதில்
எள்ளழவும் உதடில் வருமுன் அழிந்து போகும்
இன்னுமதைச்சொல்லப் போனால்-உன்
இரவுகளை சுட்டெரித்துவிடும்
பக்கத்தில் இருப்பவரை பார்த்திராது-மனம்
பட்டப்பகலிலும் வான்வெளியில் சிறகடிக்கும்
முதன்முதலில் பார்த்த நாளை-உன்
முதுமையிலும் உதடுகள் முணுமுணுக்கும்
உள்ளம் உணர்ந்து கொள்ளும் -அப்போது...
www.tamilarasan.com